தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற கணவர் - பதைபதைக்கும் வீடியோ காட்சி - Wife complaint against her husband

காஞ்சிபுரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த கணவரின் பதைபதைக்கும் வீடியோ காட்சியை வெளியிட்டு பாதுகாப்பு கோரி மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற கணவர்
மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற கணவர்

By

Published : Mar 3, 2022, 11:31 AM IST

காஞ்சிபுரம்: சாலவாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட சின்னாலம்பாடி ஊராட்சியில் வசித்து வருபவர் ரவி. இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமானவர். ரவியின் இரண்டாம் மனைவி அருணா. அருணா - ரவி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனால் அருணா தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் தன் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேற்று (மார்ச் 02) மீண்டும் சின்னாலம்பாடி கிராமத்திலுள்ள தனது கணவர் ரவி வீட்டிற்கு தன் பிள்ளைகளுடன் செல்ல இருந்தார்.

பதைபதைக்கும் வீடியோ

அதற்கு முன்பு சாலவாக்கம் காவல் நிலையத்தில் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கணவர் ரவியும், அவருடைய முதல் மனைவியும் தான் காரணம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துவிட்டு தன் உறவினர்களுடன் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்

காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததன் காரணமாக ஆத்திரமடைந்த ரவி, கையில் அரிவாளுடன் தன் பிள்ளைகளின் எதிரே கண்மூடித்தனமாக தனது மனைவி அருணாவை வெட்ட முயற்சித்திருக்கிறார். இதில் அருணாவிற்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

ரவி என்பவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உதவியாளர் எனக் கூறி பல இடங்களில் மோசடி செய்து வருவதாகவும் அருணா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை வழக்கு - 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details