தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்திரமேரூர் ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருந்துகள்! - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் பெரிய ஏரியில் கொட்டப்பட்ட மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

whast tablets fire

By

Published : Oct 29, 2019, 4:46 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வேடபாளையம் என்னுமிடத்தில் உத்திரமேரூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஏராளமான மருந்து, மாத்திரைகளை ஏரியில் கொட்டி தீ வைத்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் மருந்து மாத்திரைகளும் அவைகளின் துற்நாற்றமும் வீசிவருகிறது. நீர்நிலைகளில் மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி காணப்படுகிறது. கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் மழை பெய்யாமல் வறட்சியடைந்த ஏரி தற்சமயம் பெய்துவரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், இதுபோன்று செயலால் ஏரியின் மொத்த நீரும் பாதிக்கும் சூழல் நிலவியுள்ளது.

ஏரியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொட்டப்பட்ட மருந்துகள்

எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி மருந்து மாத்திரைகளை கொட்டிச் சென்ற நபர் யார் என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், இங்கு கொட்டிக்கிடக்கும் மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details