காஞ்சிபுரம் நகர அதிமுக சார்பில், காஞ்சிபுரம் - காந்தி ரோடு தேரடிப் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தாகத்தைப் போக்கும் வகையில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று (ஏப்.10) நடைபெற்றது.
இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் குடிநீர், இளநீர், தர்பூசணி வெள்ளரி, பழங்கள், பழ ரசங்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - kancheepuram admk opened thanneer pandhal
காஞ்சிபுரம்: கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்களின் குடிநீர் தாகத்தைப் போக்க மாவட்ட நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், நகரச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.