காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பையூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகத் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 32 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் உள்ளது.
தற்போது பருவமழைத் தொடங்கியதால் உபரி நீரானது ஏரிகள் நிரம்பி, பாலாற்றுக்கு வரத்தொடங்கியது. இதனையடுத்து பாலாற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையில், தண்ணீர் சுமார் 10 அடிக்கு மேலாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் உபரி நீர் நிரம்பி வழிகிறது.