தமிழ்நாட்டில் நிவர் புயல், புரெவி புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகள் மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 311 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்நிலையில் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட சங்கராபுரம் ஏரியின் மதகு திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிவருவதால் ஏரியில் நீர்மட்டம் குறைந்துவருகிறது. இந்த ஏரி நீர் பாசனத்தால் 50 ஏக்கர் அளவில் விவசாயிகள் பயன்பெறுவர்.