தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் அனுமதியின்றி செயல்பட்ட 57 குடிநீர் ஆலைகளுக்குச் சீல்!

காஞ்சிபுரம்: அனுமதியின்றி செயல்பட்டுவந்த 57 குடிநீர் ஆலைகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சீல்வைக்கப்பட்டது.

ஆலைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்
ஆலைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள்

By

Published : Mar 3, 2020, 8:19 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 125 குடிநீர் ஆலைகள் இயங்கிவருகின்றன. இதில் 55 நிறுவனங்கள் உரிமம் பெற்றவை. மேலும், உரிமத்தைப் புதுப்பிக்காத, உரிமம் பெறாத நிறுவனங்கள் 70 உள்ளன.

மேற்படி 70 நிறுவனங்களில் 10 காஞ்சிபுரம், 10 திருப்பெரும்புதூர், ஐந்து உத்திரமேரூர், 44 குன்றத்தூர், ஒன்று வாலாஜாபாத் வட்டங்களில் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தடி நீரைப் பயன்படுத்த பொதுப்பணித் துறையின் தடையில்லாச் சான்று பெறாத, தடையின்மைச் சான்று புதுப்பிக்க அனுமதிபெறாமல் இயங்கிவந்த குடிநீர் நிறுவனங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆலைகளுக்குச் சீல்வைத்த அலுவலர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 13 குடிநீர் ஆலைகளுக்குச் சீல்வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் 57 குடிநீர் ஆலைகளுக்குச் சீல்வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அனுமதியின்றி செயல்பட்ட 10 குடிநீர் ஆலைகளுக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details