தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணியானது தேர்தல் அலுவலர் முன்னிலையில் தொடங்கியது.

வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

By

Published : Apr 5, 2021, 8:49 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது நாளை நடைபெறவுள்ளதால், அதற்கான பணிகள் திவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், ஆலந்தூர் உள்ளிட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 1,872 வாக்கு சாவடிக்களில், 245 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு வாக்கு பதிவு நடைபெறவுள்ளதால், அதற்கான வாக்கு பதிவு இயந்திரம், VVPAT, CONTROL UNIT அனுப்பும் பணியானது தொடங்கியது.

தற்போது காஞ்சிபுரம் கீழ்அம்பி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை, காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் அலுவலர் ராஜலட்சுமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதுபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கரோனா முழு கவச உடை மற்றும் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சானிடைசேர், மாஸ்க், கை உரை உள்ளிட 13 வகையான கரோனா தடுப்பு உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் வாக்கு சாவடியில் மாற்று திறனாளிகளின் பயன்பாட்டிற்காக வீல் சேர், வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, குப்பை தொட்டி போன்றவையும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 13 லட்சத்து 15 ஆயிரத்து 379 பேர் உள்ளனர்.

இதில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 26,405 பேர் உள்ளனர். தேர்தலை ஒட்டி மாவட்டத்தில் 1,857 காவல்துறையினரும், 642 முன்னாள் காவல், ராணுவத்தினரும், 250 என்எஸ்எஸ் மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வாக்குசாவடி மற்றும் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் 8 ஆயிரத்து 984 பேர் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிங்க:கரூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details