காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலும், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும் சேர்த்து தலா 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக, அங்கு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரமே போதுமானதாக உள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
காஞ்சிபுரம் தொகுதிக்கு கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு - வாக்காளர்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சோழிங்கநல்லூருக்கு மூன்றாயிரத்து 462 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக அனுப்பிவைக்கப்படுகின்றன.
இதேபோல், தென் சென்னையில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்குச்சாவடிக்கு மூன்று இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தென் சென்னை தொகுதியில், சோழிங்கநல்லுார் இருப்பதால் அதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பப்படுகின்றன.
அந்தவகையில், சோழிங்கநல்லுாருக்கு ஏற்கனவே, 772 இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் இரண்டு மடங்கு இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஆயிரத்து 544 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக அனுப்பப்படுகின்றன. இதேபோல், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு கூடுதலாக ஆயிரத்து 918 இயந்திரங்கள் மீண்டும் அனுப்பப்படுகின்றன.