காஞ்சிபுரம்: விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய இணைச் செயலாளர் கோ. ஸ்தானுமாலயன், தென்பாரத அமைப்பாளர் நாகராஜன், மாவட்டத் தலைவர் சிவானந்தம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்டோர் ஸ்ரீ சங்கர மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசிபெற்றனர்.
'கரோனாவே போக்குங்கள்' - சங்கரமட சுவாமிக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை - கரோனாவிலிருந்து குணமடைய வழிபாடு
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மட பீடாதிபதி சுவாமிகளை நேரில் சந்தித்த ஆர்எஸ்எஸ், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட பூஜை செய்யுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
!['கரோனாவே போக்குங்கள்' - சங்கரமட சுவாமிக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை 'கரோனாவே போக்குங்கள்' - சங்கர மட சுவாமிக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12188424-thumbnail-3x2-aa.jpg)
அப்போது உலகையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி பூஜை செய்யுமாறு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் காஞ்சிபுரம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையுடன் இணைந்து, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு நாள்தோறும் ஆயிரத்து 300 உணவுப் பொட்டலங்களை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதையும் தடுப்பூசி முகாம்களை நடத்திய விவரங்களையும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் தெரிவித்தனர்.
'ஆத்தா வந்துட்டா..' கரோனாவின் ஆட்சிக்கு மத்தியில் கரோனா தேவியின் ஆசி