காஞ்சிபுரம்: அமமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் சார்பில் உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுகவின் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஆர்.வி.ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கம்பாக்கம், அவளூர், காமராஜபுரம், தம்மனூர், இளையனார் வேலூர், காவாந்தண்டலம், பெரிய நத்தம், ஆசூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உத்திரமேரூர் அமமுக வேட்பாளர்ஆர்.வி.ரஞ்சித்குமார் வாக்குச் சேகரிப்பு கிராமப்புறங்களின் வீதிகளில் நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ரஞ்சித்குமாருக்கு, கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
இந்நிலையில், தனக்கு வாக்களிக்கும் அனைவருமே சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான் எனவே தன்னை நேரடியாக தொடர்பு கொண்டு அனைவரும் தங்களது குறைகளைக் கூறலாம் எனவும், 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் பெற்றுத் தருவேன், பொது மக்கள் கொடுக்கும் மனுக்களின்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த மனுக்களின் மீது 15 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என வாக்குறுதிகள் அளித்து, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க:பச்சைத் துண்டு பழனிசாமி தற்போது பச்சோந்தி பழனிசாமி - ஸ்டாலின் சாடல்