தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் ரத்தால் சுங்கச்சாவடியில் குவியும் வாகனங்கள் - ஊழியர்கள் திணறல்! - சுங்கச்சாவடி

காஞ்சிபுரம் : ஊரடங்கில் கொண்டுவரப்பட்ட தளர்வுகள் காரணமாக இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் வழக்கத்தை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

vehicles-piled-up-at-the-customs-post-due-to-cancellation-of-e-pass-customs-staff-stagnation
vehicles-piled-up-at-the-customs-post-due-to-cancellation-of-e-pass-customs-staff-stagnation

By

Published : Sep 1, 2020, 11:41 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி வழியாக அதிகளவில் வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இதற்கு ஸ்ரீபெரும்புதூரில் அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளும் ஒரு காரணம்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து மாதங்களாக நடைமுறையில் இருந்த இ-பாஸ் முறையானது, இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்க சாவடியில் வாகனங்கள் எண்ணிக்கை இன்று வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

இ- பாஸ் ரத்து செய்யப்பட்டதால் சுங்கச்சாவடியில் குவியும் வாகனங்கள்

மேலும் அதிகளவில் வாகனங்கள் வருவதால், ஒவ்வொரு வாகனமும் இந்த சுங்கச் சாவடியை கடந்து செல்ல அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க:தொடர் சரிவில் மேட்டூர் அணை நீர்மட்டம்!

ABOUT THE AUTHOR

...view details