தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா - ஸ்ரீபெரும்புதூரில் வாகனங்கள் கணக்கெடுப்பு - Kanchipuram District latest News

காஞ்சிபுரம்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினரால் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

Vehicle survey in Sriperumbudur
ஸ்ரீபெரும்புதூரில் வாகனங்கள் கணக்கெடுப்பு

By

Published : Jan 27, 2021, 11:20 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா இன்று(ஜன.27) நடைபெற்றது. நினைவு இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதையொட்டி இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏதுவாக நினைவிடம் திறப்பு விழாவிற்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் ஸ்ரீபெரும்பத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துரையினரால் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை 700க்கும் அதிகமான பேருந்துகளும், 100க்கும் மேற்பட்ட வேன்கள், 300க்கும் மேற்பட்ட கார்கள் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் வாகனங்கள் கணக்கெடுப்பு

தொடர்ந்து சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் காவல்துறையினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அமேசான் பிரைமில் வெளியாகிறது 'மாஸ்டர்' திரைப்படம்..!

ABOUT THE AUTHOR

...view details