தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏலம் மூலம் தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது - தொல். திருமாவளவன் - காஞ்சிபுரத்தில் தொல் திருமாவளவன்

காஞ்சிபுரம்: ஏலம் மூலம் தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

vck-thiruma-press-meet
vck-thiruma-press-meet

By

Published : Dec 16, 2019, 4:27 AM IST

காஞ்சிபுரம் ஆண்டி சிருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ரோஜா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார். மேலும், அப்பெண்ணின் இறப்பிற்கு காரணமாக இருந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மறைந்த ரோஜாவின் குடும்பத்திற்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ரோஜா குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தொல். திருமாவளவன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ‘உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விடுபவர்வர்கள், ஏலம் எடுத்தவர்கள் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தேர்வாகின்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவி செல்லாது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

தொல். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

மத்திய அரசு பெரிய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் போது அப்பகுதியில் வாழும் மக்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்ட பின்னர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முயல வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்! குற்றவாளியை கைது செய்த காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details