தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவை அழிக்கப் போவது பிஜேபிதான் - தொல். திருமாவளவன்! - VCK Party Election Campaign

காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பனையூர் மு. பாபுவை ஆதரித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

தேர்தல்ம் பரப்புரையில்  தொல்.திருமாவளவன்
தேர்தல்ம் பரப்புரையில் தொல்.திருமாவளவன்

By

Published : Mar 24, 2021, 1:08 PM IST

அப்போது பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே உருவான கொள்கை கூட்டணியாகும். சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் பாசிக சனாதன கூட்டத்திற்கு எதிராக சமூக நீதியை காக்க உருவான கூட்டணி தான் திமுக தலைமையிலான கூட்டணியாகும். மேலும் அதிமுகவின் இரட்டை இலைக்கும், பாமகவின் மாம்பழத்திற்கும் வாக்களிப்பது என்பது பாஜகவின் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பதாக தான் பொருள்.
அதிமுக தொண்டர்களை நீங்கள் நினைவில் வைக்கவேண்டும். மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நமக்கு எதிரான கூட்டணி மதவெறி - சாதிவெறி பிடித்த கூட்டணி. ஆனால் நமது கூட்டணி சமூக நீதியை பாதுகாக்க உருவான கூட்டணியாகும். சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற சட்டங்களை கொண்டு வந்தபோது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதிமுகவின் கட்சி எம்பிக்கள் ஆதரவு அளித்தார்கள்.

தேர்தல் பரப்புரையில் தொல். திருமாவளவன்

ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தால் தான் தமிழ்நாட்டில் சமூக நீதியையும், சமூக நல்லிணக்கத்தையும் காப்பாற்ற முடியும். அதுபோல இஸ்லாமிய - கிறித்தவ சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பாற்ற முடியும். ஒடுக்குமுறைகளை தடுக்க முடியும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க முடியும். ஒட்டுமொத்த சமூக நீதியை பாதுகாக்க முடியும்.

எனவே, செய்யூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பனையூர் பாபுவிற்கு பானை சின்னத்தில் வாக்கு அளித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க:பாஜகவின் தேர்தல் அறிக்கையை தோலுரிக்கும் நெட்டிசன்கள்

ABOUT THE AUTHOR

...view details