காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலிலுள்ள ஐந்து உண்டியல்கள், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மா.ஜெயா, கோயில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் இன்று (மே 12) திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் திறப்பு - ரூ.51,86,327 காணிக்கை! - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
காஞ்சிபுரம் அத்தி வரதர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 51 லட்சத்து 86 ஆயிரத்து 327 பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
Varadaraja Perumal Temple Bills Opening
அதில், 51 லட்சத்து 86 ஆயிரத்து 327 ரூபாய் ரொக்கப் பணமும், 89 கிராம் தங்கமும், 556 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.