செங்கல்பட்டு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
இந்த பூங்காவில் 2,452 விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை பாதுகாக்கும் விதமாக உயிரியல் பூங்கா அலுவலர்கள் விலங்குகளை தத்து எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இத்திட்டத்தில் பலரும் ஆர்வமுடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு முதல் சிங்கம், யானைகளை தத்தெடுத்து, அதற்கான நிதியுதவி அளித்துவந்தனர்.
இந்நிலையில், பூங்காவில் உள்ள விஷ்ணு என்கின்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்தி என்கின்ற பெண் யானையும் ஆறு மாதத்திற்கு நடிகர் தத்தெடுத்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
பூங்கா துறை மூலமாக விலங்குகளைத் தத்து எடுப்பவர்கள், பூங்காவை இலவசாமாக சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.