காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தண்டலம் கூட்டுச் சாலையில் மண்ணூர் வழியாக காஞ்சிபுரத்தை நோக்கி மார்பில் ஏற்றிவந்த ஈச்சர் வேன் ஒன்றும், வானகரத்திலிருந்து மீன் ஏற்றிவந்த மினி லாரியும் ஒன்றோடு ஒன்று மோதின.
மேலம் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதிவிட்டு இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தன.
8 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வானகரத்திலிருந்து மீன் ஏற்றிவந்த பெண்கள் உள்பட எட்டு பேர் கை, கால், தலையில் பலத்த காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை
மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.