காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் நெமிலி சாலை பகுதியில் செல்லபெருமாள் நகர் அருகில் தனியார் நிறுவனத்திற்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் போர்ஸ் டெம்போ டிராவலர் வேன் ஒன்று ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சாலையின் ஓரத்தில் உள்ள மின் கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.
இதனால் வேனின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்ததோடு அறுந்து விழுந்த மின் வயர் தீப்பிடிக்க ஆரம்பித்த அடுத்த நொடியே மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், வேனில் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.