தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய்த் துறை அதிரடி - income tax

உத்திரமேரூர் அருகே அரசுக்குச் சொந்தமான மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் செய்திகள்  அரசு நிலங்கள் மீட்பு  வருவாய்த்துறை  அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு  காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு  kancheepuram news  kancheepuram latest news  value of three crores land recovered by income tax officer in kancheepuram  value of three crores land recovered  income tax officer  income tax  value of three crores land recovered in kancheepuram
வருவாய்த்துறை ஆய்வு

By

Published : Aug 5, 2021, 8:16 AM IST

காஞ்சிபுரம்:உத்திரமேரூர், தளவராம் பூண்டி ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சமூக விரோதிகள் சிலர் விற்பனையில் ஈடுபடுவதாக, கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதன் அடிப்படையில் நேற்று (ஆகஸ்ட் 4) உத்திரமேரூர் வட்டாட்சியர் உமா, ஆய்வாளர் பிரியா தலைமையிலான வருவாய்த் துறையினர் தளவராம் பூண்டி கிராமத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை அலுவலர்கள் நிலங்களை மீட்டெடுத்தனர்.

பின்னர் மீட்டெடுக்கப்பட்ட நிலத்தில், அத்துமீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்னும் அறிவிப்புப் பலகை ஒன்றையும் வைத்தனர்.

இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ். அலுவலரின் கணவரிடம் கைவசம் காட்டிய கொள்ளையர்கள்

ABOUT THE AUTHOR

...view details