காஞ்சிபுரம்:உத்தரமேரூர் அருகே பருத்திக்கொல்லை கிராமத்தில் ரஃபேல் லைஃப் கேர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆக.3) நடைபெற்றது.
ரஃபேல் கேர் மருத்துவமனை நிறுவன தலைவர் ஜான் லாசரஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.