தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உத்திரமேரூரில் கிடைத்த தங்கக் குவியல்: அரசுக்கு கொடுக்க கிராம மக்கள் மறுப்பு!

காஞ்சிபுரம்: 500 ஆண்டு கால பழமையான உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளும்பொழுது கிடைக்கப்பெற்ற தங்கத்தினை அரசுக்குத் தர முடியாது என கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உத்திரமேரூரில் கிடைத்த தங்க குவியல்: அரசுக்கு கொடுக்க கிராம மக்கள் மறுப்பு!
உத்திரமேரூரில் கிடைத்த தங்க குவியல்: அரசுக்கு கொடுக்க கிராம மக்கள் மறுப்பு!

By

Published : Dec 13, 2020, 12:10 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த கோயில் விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் முடிவுசெய்தனர்.

இதனையடுத்து, கோயில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளைத் திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன்கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன.

மேலும் வருவாய்த் துறை அனுமதி இல்லாமல் 500 ஆண்டுகால பழமையான கோயிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். அப்பொழுது கோயிலில் படிக்கட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும்பொழுது குவியல் குவியலாகத் தங்கம் கிடைத்ததாக வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தங்கத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல்செய்வதற்காக கோயில் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும்பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய்த் துறைக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களால் கையகப்படுத்தப்பட்ட தங்க நகைகளின் மதிப்பீட்டு குறித்து வருவாய்த் துறையும், காவல் துறையும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உத்திரமேரூரில் கிடைத்த தங்கக் குவியல்: அரசுக்கு கொடுக்க கிராம மக்கள் மறுப்பு!

இந்நிலையில் இக்கோயிலில் தோண்ட தோண்ட தங்கப் புதையல்கள் கிடைப்பதாக ஊடகங்களில் தவறான செய்திகள் உலாவருகின்றன. அவ்வாறு எவ்வித தங்கப் புதையல்களும் கிடைக்கபெறவில்லை.

கருவறையின் வாசக்காலின்கீழ் தங்க நகை ஆபரணங்கள் கிடைக்கபெற்றன. தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் யாவும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாகச் செய்து சாத்தப்படும். நகைகளை நாங்களே பாதுகாப்பாக வைத்துள்ளோம். அரசுக்கு நகைகளை கொடுக்க மாட்டோம் என அப்பகுதி ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க...உத்திரமேரூரில் பழங்கால கோயிலில் 1 கிலோ தங்கப் புதையல் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details