காஞ்சிபுரம்: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், வாக்குச் சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமமின்றி வாக்களிக்க, அவர்களுக்கென சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து கொடுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் இரண்டு சக்கர நாற்காலிகள் ஒதுக்கப்பட்டன.
அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆலந்தூர் என நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 1,872 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு தேர்தல் வாக்குப்பதிவின் போது பயன்படுத்திய சக்கர நாற்காலிகள் தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார அலுவலகங்களில் கேட்பாரற்று குப்பையாக போடப்பட்டுள்ளன.