தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரமற்ற கரோனா சிகிச்சை மையம்: ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதம்

காஞ்சிபுரம்: எழுச்சூரில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஊழியர்களை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jul 9, 2020, 1:03 PM IST

ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாத
ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாத

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே எழுச்சூரில் அமைந்துள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டடத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், மருந்து மாத்திரைகள், முறையாக வழங்கவில்லை எனக் கூறி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்

அப்போது, தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் உணவு வழங்குவதால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும், சிகிச்சை மையத்தில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளதால் தொற்று தீவிரமடையும் அபாயம் ஏற்படுவதோடு, தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க:சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details