காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவடத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று(பிப்.3) தொடங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து தன் பரப்புரையைத் தொடங்கினார்.
பட்டு நகரமான காஞ்சிபுரத்தின் பிரதான பாரம்பரியமிக்கத் தொழிலான நெசவுத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிய நெசவாளர்கள் மிகுதியாக உள்ள காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு சென்ற அவர், நெசவாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று உரையாடினார்.