காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் திமுக இளைஞரணி மாநில செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும், மு.க ஸ்டாலின், முக்கிய கட்சிப் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று பொது மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் ஆயிரம் தென்னை மரக்கன்றுகள், ஆயிரம் பேருக்கு மதிய உணவு, 300 மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், மக்களுக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,