செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பழைய கிணற்றை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில், கிணற்றுக்குள் ஐந்து பேரும் கிணற்றுக்கு மேல்பகுதியில் ஏழு பேரும் என 12 பேர் வேலை செய்துவந்தனர்.
அப்போது, ஏற்பட்ட திடீர் மண்சரிவில் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசு (24), விஜி (23), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சரவணன், மணி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.