தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 2 போ் கைது - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1

By

Published : Apr 3, 2019, 7:27 AM IST

Updated : Apr 13, 2019, 12:20 PM IST

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என, அவரது பெற்றோர், விஷ்ணுகாஞ்சி காவல் துறையினரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல் துறையினர் அச்சிறுமியை தேடிவந்தனர். அப்போது மயங்கிய நிலையில் சிறுமி, சாலையில் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

pocso

அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை விசாரித்தனர். விசாரணையில் ராஜா, தேவா அரவிந்த், தினேஷ் ஆகியோர் தன்னை ஆட்டோவில் கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, ராஜா, தேவா அரவிந்த், தினேஷ் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்தனர். இதில் ராஜா, தேவாவை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தலைமறைவான தினேஷை தேடிவருகின்றனர்.

Last Updated : Apr 13, 2019, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details