காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பி.டி.சி. கோட்ரஸ் குடியிருப்புப் பகுதியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் ராஜேஷ் (35), ஏழுமலை (35) ஆகிய இருவர் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கி எதிர்பாராதவிதமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து மணிமங்கலம் காவல் துறையினருக்கும், தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.