தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பாமகவினர் 200 பேர் கைது!

காஞ்சிபுரம்: சென்னையில் நடைபெறும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரிய போரட்டத்தில் கலந்துகொள்ள வந்த பாமகவினர் 200 பேரை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் வைத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.

பாமக
பாமக

By

Published : Dec 1, 2020, 11:59 AM IST

தமிழ்நாடு அரசுப் பணியில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு பாமக சார்பில் இன்று (டிச. 01) போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாமக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் சென்னை நோக்கி கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் பாமகவினர் 200 பேர் கைது
அவர்களை சென்னை எல்லையான ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைதுசெய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாகனங்களில் வந்த பாமகவினரைக் காவல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் சென்னை-பெங்களூரு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் சுமார் 200 பேரை கைதுசெய்தனர்.

பின்னர் அவர்களை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பாமகவின் மறியல் காரணமாக சென்னை-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பாமகவினரைத் தடுத்து நிறுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஏஎஸ்பி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details