தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழப்பு - டாரஸ் லாரி

படப்பை அருகே வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் டாரஸ் லாரியொன்று, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 27, 2022, 7:17 PM IST

காஞ்சிபுரம்:படப்பை அருகே சாலமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரின் மீது டாரஸ் லாரி ஒன்று இன்று (ஆக.27) மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர்கள் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், குமார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Audio Leak... எடப்பாடியும் தானே துரோகம் பண்ணாரு... ஆறுக்குட்டியின் பரபரப்பு ஆடியோ

ABOUT THE AUTHOR

...view details