காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஜெகத்பிரியன்(8) மற்றும் திருப்புட்குழி ரோட்டுத்தெருவை சேர்ந்த சோமுவின் மகன் சுஜன்(12) ஆகிய இரு சிறுவர்களும் அருகில் உள்ள தாமரை குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது ஆழம் தெரியாததால் எதிர்பாராமல் குளத்து நீரில் சிறுவர்கள் இருவரும் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரமாக சிறுவர்களை காணாமல் அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கித் தேடி சிறுவர்கள் இருவரது உடல்களையும் மீட்டனர்.