காஞ்சிபுரம்: ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக காஞ்சிபுரம் சரக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு, ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினர் இன்று காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டை சந்திப்பில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை காவலர்கள் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவலர்களின் விசாரணையில், அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த பவன்குமார் (20), பானு பிரகாஷ் (21) என்பதும், அவர்கள் ஆந்திராவில் இருந்து 23 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இப்பகுதியிலுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.