தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா கடத்திய இருவர் கைது - ஏழு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! - ஏழு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

காஞ்சிபுரம்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திய இருவரை காஞ்சிபுரம் சரக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

two-arrested-for-smuggling-cannabis-7-lakh-worth-of-cannabis-seized
two-arrested-for-smuggling-cannabis-7-lakh-worth-of-cannabis-seized

By

Published : Feb 11, 2020, 5:28 PM IST

ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் சரக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தத் தகவலின்பேரில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்பின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் சந்தேகத்திற்குறிய இரண்டு பேரை விசாரித்த காவல் துறையினர், அவர்களை சோதனையிட்டபோது அவர்கள் கொண்டுவந்த 4 பைகளில், கஞ்சா கடத்திவந்தது தெரிந்தது.

இதனையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மதுரையை சேர்ந்த குருநாதன், ஆந்திர மாநிலம் நகிரி பகுதியைச் சேர்ந்த லோவராஜ் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 46 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர் கைது

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரையும் போதைப்போருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் வைத்து தேர்வு முறைகேடு - ஜெயக்குமார் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details