காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசருக்கு குட்கா பொருள்களை வெள்ளைகேட் அருகே தாமரை தாங்கல் பகுதியில் கண்டெய்னர் லாரிகளில் கடத்திவந்து, மினி லாரிகளுக்கு மாற்றுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் ராஜகோபால், உதவி ஆய்வாளர்கள் ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இவர்களை பார்த்ததும், லாரி ஓட்டுநர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர்.
குட்கா பொருள்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் இதையடுத்து, தப்பி ஓடியவர்களை கைது செய்து, லாரியை பரிசோதனை செய்ததில் டேபிள் ஃபேன் மற்றும் குக்கர் போன்ற மின்சாதனங்களுடன் அதன் உட்புறத்தில் குட்கா மூட்டைகளைப் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூட்டை மூட்டையாக குட்கா
இந்த விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருள்களைக் காஞ்சிபுரம் ஏற்றி வரப்பட்டதும் அவற்றைக் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளுக்கு சப்ளை செய்வதற்காகக் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, லாரியிலிருந்த 120 குட்கா பொருள்கள் அடங்கிய மூட்டைகள், மின்சாதன பொருள்கள் மற்றும் அவற்றை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு ஆட்டோக்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
லாரி ஒட்டுநர் சசிகுமார், கூலி தொழிலாளி பழனிவேல் ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றினால் ஆசிரியர் கலாந்தாய்வில் முன்னுரிமை