செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், பரனூர் சுங்கச்சாவடி அடித்து உடைக்கப்பட்டது.
அந்தச் சுங்கச்சாவடியானது தற்போது சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அந்தச் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை சுமார் ரூ.425.77 கோடி ரூபாயையும், 2016ஆம் ஆண்டிலிருந்து இதுநாள் வரை ரூ.239 கோடி ரூபாயையும் இந்தச் சுங்கச்சாவடி வசூலித்துள்ளது.