வேலூரில் முதலமைச்சர் நிவாரண பொருள்கள் வழங்குவதற்காக சென்னையிலிருந்து வேலூருக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு ஈச்சர் லாரி சென்று கொண்டிருந்தது.
நிவாரண பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து! - நிவாரண பொருள்கள் ஏற்றிவந்த லாரி விபத்து
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வேலூருக்கு நிவாரண பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச் சாவடிக்கு அரை கிலோமீட்டர் முன்பாக டீசல் குறைவு காரணமாக லாரியின் ஸ்டேரிங் லாக் ஆகியுள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்திலுள்ள தரைப்பாலத்தின் சுவற்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஆறு டயர்கள், டீசல் டேங்க் துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தில் வேலூரைச் சேர்ந்த ஓட்டுநர் இன்பராஜ் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.