தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்.03) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை யொட்டி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோவில் பேரணியாக வந்து பெரு நகராட்சியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.