காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அருகே நான்கு மாட வீதிகள் அமைந்துள்ளன. தற்போது கோயிலில் ஆதி அத்தி வரதர் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை முன்னிட்டு, அந்த வீதிகளை காவல்துறையினர் தடுப்பு வைத்து தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தினர்.
வரதராஜ பெருமாள் கோயில்: வீதிகளை மூடிய காவல்துறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் - காஞ்சிபுரம் போலீஸுக்கு எதிராக போராட்டம்
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் வைபவ நிகழ்ச்சியை முன்னிட்டு மாட வீதிகளின் வழி மூடப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அந்த வழியாக மருத்துவனை, பள்ளிக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவாதகக் கூறி 100க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் மற்றும் காவல்துறையினர், சாலையில் போக்குவரத்து தடையை நீக்குவதாகக் கூறி போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்பின், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.