17வது மக்களவைத்தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களுக்கு நுகர்பொருட்கள் கொண்டும், ராட்சத பலூன், நடன நிகழ்ச்சி என பல்வேறு வகையிலும் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குச்சாவடி மையம் செயல்பட தொடங்கியுள்ளது. இதில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுபாட்டு இயந்திரம், வாக்களித்த உறுதி செய்யும் வி.வி.பாட் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வண்ணம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது.