தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 7 வழக்குகள் பதிவு! - election officer

காஞ்சிபுரம்: தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

kanchi

By

Published : Apr 1, 2019, 11:59 PM IST

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையாசெய்தியாளர்களிடம் பேசுகையில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளைமீறியதாக இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் இதுவரை 37 லட்சத்து 60 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளார்கள். அதில் 18 லட்சத்து 59 ஆயிரத்து 3 வாக்காளர்கள் ஆண்கள், 19 லட்சத்து 485 பெண் வாக்காளர்களாகஉள்ளனர்.

கடந்த தேர்தலின்போது, 4 ஆயிரத்து 102 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் வாக்காளர்களின்எண்ணிக்கையை கூடியுள்ளதால் 20 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக அமைக்கப்பட்டு 4 ஆயிரத்து 122 வாக்குச்சாவடிகள் தற்போதைய நிலையில் உள்ளது. இதில் 215 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கணக்கிடப்பட்டுள்ளன.அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட தென்சென்னை நாடாளுமன்றப் பகுதியில் 10 இடங்களில் 16 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 19 இடங்களில் 24 வாக்குச்சாவடிகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 48 இடங்களில் 175 வாக்குசாவடிகள் என மொத்தம் 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கணக்கிடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details