காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள செங்குந்த பிள்ளையார் கோவில் தெருவில் பல ஆண்டுகளாகப் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்குப் புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று (மார்ச் 8) உத்திரமேரூர் தனிப்படை காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர். அப்போது அங்கு மல்லிகா என்பவர் தலைமையில் பாலியல் தொழில் நடைபெற்றுவந்தது தெரியவந்தது. பிறகு இது குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் மல்லிகா உள்பட நால்வரைக் கைதுசெய்தனர்.