காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் வருவதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை முன்னிட்டு பல்வேறு கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் கல், கடற்கரை கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளனர். அவர்களது வருகையால் மாமல்லபுரமே புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஆய்வு! - துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
காஞ்சிபுரம்: இந்திய பிரதமர்-சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டனர்.
edappadi palanisamy
இந்நிலையில் இந்திய பிரதமர்-சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மாமல்லபுரம், சீனா, போதி தர்மர் - இந்தக் காரணிகளுக்குள் இருக்கும் பிணைப்பு என்ன?