காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழா நடைபெற்றுவருகிறது.
பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று (மார்ச் 9) ஸ்ரீவிஜயராகவப் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் பிரசித்திப்பெற்ற தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.
திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் தங்க கருட சேவை உற்சவம்!
காஞ்சிபுரம் அருகே திருபுட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோயிலில் பிரசித்திப்பெற்ற தங்க கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் தங்க கருட சேவை உற்சவம்
கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட திருப்புக்குழி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பஜனை பாடல்கள் ஒலிக்க கருடசேவை உற்சவத்தில் ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் திரு வீதி உலாவந்தார்.
கருடசேவை உற்சவத்தைக் காண திருப்புட்குழி, பாலுசெட்டி சத்திரம், முசரவாக்கம், முட்டவாக்கம், தாமல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்து வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:'வெளி வட்டச்சாலை... வேளாண் நிலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்'