தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த மூவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு! - Three people who cleaned the septic tank were killed by poison gas

காஞ்சிபுரம்: காட்ரம்பாக்கத்தில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று ஊழியர்கள், விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

septic tank
செப்டிக் டேங்க்

By

Published : Feb 14, 2021, 3:26 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் 'வெங்கடேஸ்வரா கேட்டரிங் இண்டஸ்ட்ரியல் சர்வீஸ்' என்ற தனியார் கேட்டரிங் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று(பிப்.14), செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக, விஷவாயு தாக்கியதில் முருகன் (41) , பாக்கியராஜ் (40), ஆறுமுகம் ( 45) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்தனர். மூவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி கார்த்திகேயன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

கடந்த 2019இல், இதே ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நிர்வாகத்தினர் ஈடுபட வைக்கின்றதால் தான், இது போன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க:ஏது என்னிடமே பணம் கேட்கிறாயா...' ஓசியில் 'பப்ஸ்' தராததால் அடிதடியில் இறங்கிய போதை பாய்ஸ்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details