காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவில் வசித்து வந்தவர் பிரசன்னா. தனியார் தொலைகாட்சி நிருபரான இவர், தனது தாயார், மனைவி ரேவதி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு மூன்றுபேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த குளிர்பதனப் பெட்டி வெடித்துச் சிதறி அதிலிருந்து அதிகளவிலான புகை வெளியாகியுள்ளது.
குளிர்பதனப் பெட்டி வெடித்து மூன்று பேர் பலி! - reporter
காஞ்சிபுரம்: கிழக்கு தாம்பரம் பகுதியில் குளிர்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த மூன்றுபேரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றும் முடியாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட தீ, வீடு முழுவதும் பரவியதில் அவர்கள் மூன்று பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து, வீட்டிற்குள் கிடந்த மூன்று பேர் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.