தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூவர் விஷவாய்வு தாக்கி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூவர் விஷவாய்வு தாக்கி உயிரிழந்தனர்.

மூவர் விஷவாய்வு தாக்கி உயிரிழப்பு
மூவர் விஷவாய்வு தாக்கி உயிரிழப்பு

By

Published : Oct 21, 2022, 6:14 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியம் கிராண்ட் எனும் பிரபல தனியார் உணவகம் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமார் (30), திருமலை (18) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூவரும் சுமார் 30அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியின் உள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கழிவு நீர் தொட்டியில் இருந்து சுமார் 15 அடி அளவிற்கு கழிவுநீரை முதற்கட்டமாக வெளியேற்றினர். மூவரும் கழிவுநீரின் சகதியிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

இதன் பின் மூவரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக ஈடுபட்டனர். அதன் பின் முதற்கட்டமாக நவீன்குமார், திருமலை ஆகிய இருவரது உடலை மட்டும் மீட்டெடுத்தனர். அதன் பின் ரங்கனாதன் என்பவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உணவக மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட மூவரது உடல்களும் உடற்கூராய்விற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தவறான கேள்வியை தவிர்த்த மாணவருக்கு மதிப்பெண்..!

ABOUT THE AUTHOR

...view details