தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாலாஜாபாத் அருகே எரிசாராயம் விற்பனை... பெண் உட்பட மூவர் கைது! - Woman arrested for selling alcohol

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே எரிசாராயம் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைதானோர்
கைதானோர்

By

Published : Dec 11, 2020, 2:41 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தில் வசிக்கும் கணேசன் என்பவரின் குடும்பத்தினர் தொடர்ந்து எரிசாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கணேசனின் மனைவி எரி சாராயம் விற்பனையில் ஈடுபட்டபோது, காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் எரி சாராயம் விற்பனை செய்து வருவதாக வாலாஜாபாத் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில், வாலாஜாபாத் காவல் துறையினர் வெண்குடி கிராமத்தில் உள்ள கணேசனின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது கேன்களிலும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 105 லிட்டர் எரி சாராயத்தை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து கணேசன் மற்றும் அவரது மகள் பவித்ரா, உறவினர் ரமேஷ் ஆகிய மூவரையும் வாலாஜாபாத் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 105 லிட்டர் எரி சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சாராய விற்பனையில் தொடர்புடைய பலரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:திருவள்ளூரில் 10 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details