தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்துக்கு 38,000 தடுப்பூசிகள் - 40 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி - Kanchipuram district news

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திற்கு 38,000 தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததை தொடர்ந்து, 40 முகாம்களில் ஒரு வாரத்திற்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்துக்கு வந்தடைந்த 38 ஆயிரம் தடுப்பூசிகள்
காஞ்சிபுரத்துக்கு வந்தடைந்த 38 ஆயிரம் தடுப்பூசிகள்

By

Published : Jun 12, 2021, 4:58 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் கரோனா இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக அனைத்து சிறப்பு தடுப்பூசி முகாம்களும் ரத்து செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 38 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்தன. அதனையடுத்து இன்றுமுதல் மீண்டும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 40 கரோனா இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஒரு வாரம் இடைவெளிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்துக்கு வந்தடைந்த 38 ஆயிரம் தடுப்பூசிகள்
இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 350 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details