தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு திட்டங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும் - டி.ஆர் பாலு எம்.பி - பரந்தூர் விமான நிலையம் குறித்து டி ஆர் பாலு

பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்,அரசு திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில் அதற்கான முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து காஞ்சிபுரத்தில்,விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும் - டி.ஆர் பாலு எம்.பி
அரசு திட்டங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும் - டி.ஆர் பாலு எம்.பி

By

Published : Aug 23, 2022, 9:00 PM IST

காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர்.பாலு தலைமையில் இன்று(ஆக.23) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி. செல்வம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் க. சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன்,கு.செல்வப் பெருந்தகை மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரசு திட்டங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும் - டி.ஆர் பாலு எம்.பி

இதன்பின் செய்தியாளரிடம் பேசிய விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, ”சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் புதிய கட்டமைப்பு தேவைப்பட்டதால் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் சாலை கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும் எனவும், பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால் இப்பிரச்சனை நிலவுதாகவும், அதற்கு உரிய தீர்வு காணப்படும். பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் அரசு திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில் அதற்கான முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு மிக விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை வீடியோ... கைதான பாஜக எம்எல்ஏ ராஜா சிங்... கட்சியில் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details