காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி - விஜயபிரபா தம்பதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அன்பு கொண்ட பாக்கியலட்சுமி, விலங்குகள் குறித்த புத்தகங்களை தேடி தேடி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விலங்குகளின் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலம் குறித்து தெரிந்துகொண்ட அவர், இதுதொடர்பாக சாதனை மேற்கொள்ள ஆசிய சாதனை புத்தக பதிவில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார். இதற்காக மாணவி பாக்கியலட்சுமி கரோனா விடுமுறையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பயிற்சி மேற்கொண்டார்.
ஒரு நிமிடத்தில் 59 விலங்குகள் பெயர், ஆயுட்காலம் குறித்து கூறி சாதனை படைத்த மாணவி அதனைத்தொடர்ந்து, நேற்று (பிப்.13) ஒரு நிமிடத்தில் அதிகளவில் விலங்குகள் பெயர் மற்றும் அதன் ஆயுட்காலம் தெரிவிக்கும் நிகழ்வு தென் பிராந்திய ஆசிய சாதனை புத்தக ஒருங்கிணைப்பாளர் விவேக் மற்றும் செரிபா முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாணவி பாக்கியலட்சுமி ஒரு நிமிடத்தில் 59 விலங்குகளின் பெயர்கள் அதன் ஆயுட்காலம் குறித்து துல்லியமாகக் கூறி புதிய சாதனை படைத்தார். இந்த சாதனை அடுத்த ஆண்டு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்றும் அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி மாணவிக்கு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர் மீது பகை - நாடகம் அரங்கேற்றிச் சிக்கிய 19 வயது இளம்பெண்!